மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

வேட்புமனுவில் பேன் நம்பரை மறைத்தாரா கே.சி. வீரமணி?

வேட்புமனுவில் பேன் நம்பரை மறைத்தாரா கே.சி. வீரமணி?

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தவறான விவரங்களை தெரிவித்து தேர்தலில் போட்டியிட்டிருப்பதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக திமுக சார்பில் தேவராஜி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் 1091 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சி.வீரமணி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியின் வாக்காளரான ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார்.

அதில், “கே.சி. வீரமணி கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த கே.சி. வீரமணி, மனுவிலும் அது தொடர்பான ஆவணங்களிலும் தன்னைப் பற்றி தவறான விவரங்களை தாக்கல் செய்திருக்கிறார். கே.சி.வீரமணி வேட்பு மனு ஆவணங்களோடு தவறான பேன் நம்பரை குறிப்பிட்டிருக்கிறார். அந்த பேன் எண்ணோடு அவரது சொத்து விவரங்கள் ஒத்துப் போகவில்லை. தவறான விவரங்களை தெரிவித்த கே.சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “இதுகுறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்து அந்த மனுவை முடித்துவைத்துவிட்டோம்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை இன்று (ஜூலை 12) விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரங்கள் பற்றி பதிலளிக்க வேண்டும் என்றும், கே.சி. வீரமணி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தது..

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 12 ஜூலை 2021