மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

முருகனை நீக்கிவிட்டு கொங்குநாடு முழக்கமா? திருமா சந்தேகம்!

முருகனை நீக்கிவிட்டு கொங்குநாடு முழக்கமா? திருமா சந்தேகம்!

பாஜக ஜம்மு காஷ்மீரை பிரித்ததைப் போல தமிழ்நாட்டை பிரிக்க சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (ஜூலை 11) சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

“பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உத்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்திகளை செய்து வருகிறது. இப்படித்தான் ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்தது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வருகின்றது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டிலும் இது போன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாக தெரிகிறது”என்று கூறிய திருமாவளவன்,

கொங்குநாடு முழக்கத்துக்கு முன் பாஜக தலைவர் எல். முருகனை நீக்கியது தவறு என்றும் தெரிவித்தார்.

“பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு. அவரால்தான் தமிழகத்தில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

திங்கள் 12 ஜூலை 2021