மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

போராட்டம் தொடரும்: கமல்

போராட்டம் தொடரும்: கமல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எரிபொருளின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மக்கள் மத்தியில் இருக்கும் முக்கிய பிரச்சினை பெட்ரோல் டீசல் விலை உயர்வு.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் நேற்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர். காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் சென்றும், செங்கல் அடுப்பில் சமைப்பது போன்று, ஏணி வடிவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தாலும், அக்கட்சியின் தலைவர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய அக்கட்சித் துணைத் தலைவர் மௌரியா, “இது முதல் போராட்டம் என்பதால் கமல் கலந்துகொள்ளவில்லை, எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார். போராட்டப் படங்களையும் பகிர்ந்துள்ளார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 11 ஜூலை 2021