மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி? அமைச்சர் விளக்கம்!

கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி? அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டதைவிட கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவு, பரிசோதனை கருவிகள் மையம் திறப்பு, கர்ப்பிணி மற்றும் திருநங்கைகளுக்கான கொரோனா தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட பணிகளை நேற்று (ஜூலை 10) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எதிர்வரும் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் வார்டு உருவாக்கப்பட்டு வருகிறது. அதுபோன்றுதான், திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தடுப்பூசி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனுடன் 6 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது.

ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் வந்துள்ளன. ஆனால் இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்குக் கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டதைவிட கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது எவ்வாறு என கேள்வி எழலாம்.

ஒரு வயலில் 16 முதல் 24 சதவிகிதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்தி ஒரு வயல் மூலம் 11-12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த மாதத்துக்கான ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து, தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள் தனது சொந்த கிளினிக்கில் பணி செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், 108 பணியாளர்கள் போன்றவர்களுக்கு முதல்வரின் ஆலோசனையைப் பெற்று நிரந்தரப் பணி அல்லது பணி கால நீட்டிப்புச் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வரக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் எண்ணம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 11 ஜூலை 2021