மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

புதுச்சேரி: டம்மி முதல்வரா ரங்கசாமி? உள்துறையை கைப்பற்றிய பாஜக

புதுச்சேரி: டம்மி முதல்வரா ரங்கசாமி? உள்துறையை கைப்பற்றிய பாஜக

நீண்ட இழுபறிக்குப் பின்னர், புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அடங்கிய பட்டியலை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம், முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அந்த பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கும் தமிழகத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்து முடிந்து, ஒரே நாளில் முடிவு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மே 7ஆம் தேதி பொறுப்பேற்று மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் புதுச்சேரியில் அமைச்சர்கள், சபாநாயகர் பதவி பங்கீடு, யாருக்கு எந்த துறை, ஜோசியர்களால் குழப்பம் எனத் தொடர்ந்து இழுபறியும், பாஜக என்.ஆர். காங்கிரஸ் இடையே மோதல் போக்கும் நிலவி வந்தது.

ஒருவழியாக ஜூன் 27ஆம் தேதி புதுவை அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால் யாருக்கும் துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்ததால், துறை சார்ந்த பணிகளில் ஈடுபடமுடியாமல் அமைச்சர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் அமைச்சர்களுக்கான துறைகள் அடங்கிய பட்டியல் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவு, சுகாதாரம், வருவாய், பொது நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை, வஃக்பு வாரியம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் ,

பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வீடு, மின்சாரம், தொழில்துறை மற்றும் வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன்,

லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் சிவில் ஏவியேஷன் மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம்,

தேனி ஜெயக்குமாருக்கு வேளாண், கால்நடை பராமரிப்பு, சமூக நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை

சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதித்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை கலாச்சாரம், பொருளாதாரம் புள்ளியியல் துறை

சாய் சரவணன் குமாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் துறை, சிறுபான்மை நலன், தீயணைப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே மாநிலங்களில் முதல்வர்கள்தான் உள்துறையை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். உளவுத்துறை, காவல்துறை ஆகியவற்றைக் கையாளும் உள்துறையை கடந்த காங்கிரஸ் அரசாங்கத்தில் முதல்வர் நாராயணசாமிதான் வைத்திருந்தார். ஆனால் இம்முறை உள்துறைக்கென தனி அமைச்சர் பாஜகவின் நமச்சிவாயம் இருக்கிறார். முதல்வர் ரங்கசாமியிடம் சாதாரண துறைகளே இருக்கின்றன. ஒருவேளை ஒன்றிய அரசின் ஆலோசனைகள் எல்லாம் இனி உள்துறை அமைச்சரான பாஜக நமச்சிவாயத்திடமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதல்வர் பதவியில் இருக்கும் ரங்கசாமி டம்மியாக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 11 ஜூலை 2021