மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மாற்று வழியைத் தேடும் ஒன்றிய அரசு!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மாற்று வழியைத் தேடும் ஒன்றிய அரசு!

நாட்டில் இன்று முக்கிய பிரச்சினையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வாகனங்களில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதைக் கட்டாயமாக்குவது பற்றி 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாட்டின் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை நாக்பூரில் அமைச்சர் நிதின்கட்கரி இன்று (ஜூலை 11) தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, நாம் ரூ.8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால் எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக, மலிவு விலையில், அதிக மாசு இல்லாத உள்நாட்டு எத்தனால், உயிரி இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கொள்கையை உருவாக்கியுள்ளோம்.

மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் அரிசி, சோளம் மற்றும் கரும்பு வீணாவதைத் தடுக்க நாம் இவற்றை எரிபொருளாக்க வேண்டும். நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் உள்ளன. இவற்றின் விலையும், பெட்ரோல் இன்ஜின் வாகனங்களின் விலையில் ஒரே மாதிரியானதுதான். பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிளக்ஸ் என்ஜின் எரிபொருள் செலவை குறைக்கும்” என்று கூறினார்.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

ஞாயிறு 11 ஜூலை 2021