மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

நம்புன வரைக்கும் போதும் தலைவா... ரஜினி ரசிகர்கள் புலம்பல்!

நம்புன வரைக்கும் போதும் தலைவா... ரஜினி ரசிகர்கள் புலம்பல்!

நடிகர் ரஜினிகாந்த் அவர் நடிக்கும் படம் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்மன்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கோடம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த கூட்டத்தில் அதிரடியாக அரசியல் கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்துவார். வழக்கம்போல் ஊடகங்களும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவரா?, அதனால் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு பாதிப்பு? ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பாரா? கமல்ஹாசன் ஆதரிப்பாரா? என்று அனல் பறக்கும் விவாதங்களை நடத்த தொடங்கும். இதன் காரணமாக படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கும் ரசிகர்கள் ஆர்வமுடன் வெறித்தனமாக தியேட்டர்களில் போஸ்டர், பேனர், கட் அவுட்களை வைத்து அமர்களப்படுத்துவார்கள்.

2007 சிவாஜி படம் தொடங்கி கடைசியாக வெளியான 2.0 வரை இதுதான் நடந்து வருகிறது. இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த இந்த வருடம் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்டச் செயலாளர்களுக்கும் திங்கள் கிழமை (12.07.2021)கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பாக பேசப்படும் என்றும், மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறி வெவ்வேறு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டநிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் எஞ்சி இருக்கும் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்

இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், 12ஆம் தேதி பலருக்கு மனம் மகிழ் நாள்..நம்பினோர் கைவிடப்படார். நான்கு மறை தீர்ப்பு என்று சொல்லியிருக்கிறார்.

இதில் கருத்துச் சொல்லியிருக்கும் பலரும் எதிர்மறையாகவே பேசிவருகிறார்கள்.

நம்புன வரைக்கும் போதும் தலைவா செலவு பண்ண பணம் இல்லை என்றும் நீங்க பாட்டுக்கு சும்மா ஏதாவது சொல்லுங்க..தேர்தலே முடிஞ்சு போச்சு. ஒன்னும் செய்ய முடியாது. அவங்க குடும்ப திரைப்படத்திற்காக விளம்பரம் செய்வார்…போங்க சார் என்றும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினி மீது அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இவை காட்டுகின்றன என்கிறார்கள்.

-இராமானுஜம்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 11 ஜூலை 2021