மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

இளைஞர்களிடையே விழிப்புணர்வு: அமைச்சரின் 21 கி.மீ தொடர் ஓட்டம்!

இளைஞர்களிடையே விழிப்புணர்வு: அமைச்சரின் 21 கி.மீ தொடர் ஓட்டம்!

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 21 கிமீ ஓடினார்.

அரசியல் மட்டுமல்லாது விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மா.சுப்பிரமணியன், உலக முழுவதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர்.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போதும் வீட்டு மொட்டை மாடியில் அதிக நேரம் அதாவது 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ftHeavy multiplication x15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி, 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றார்.

இவ்வாறு உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று சென்னையில் ’ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

.

காலை 4.30 மணிக்குத் தனது வீட்டிலிருந்து கலைஞர் நினைவிடம் வரை சென்று மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார். இதன் தொலைவு 21 கிமீ ஆகும்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஒன்றரை ஆண்டு காலமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் எங்கேயும் திறந்தவெளி மாரத்தான் நடைபெறவில்லை. இன்று நடைபெற்றது லண்டன் மாநகரம் நடத்திய மெய்நிகர் மாரத்தான். எங்களைப் பொறுத்தவரை ஓடலாம் நோயின்றி வாழலாம் என்ற நோக்கில் இந்த மாரத்தானை நிறைவு செய்திருக்கிறோம்.

கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களைத் தான் அதிகளவு தாக்குகிறது. நானும் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். ஆனால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. கை, கால் வலி மட்டும்தான் இருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு 10 நாட்கள் கழித்து உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில் தினமும் 10 கிமீ ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓடும் பழக்கத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணி கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக எந்தவிதமான பயிற்சியும் செய்யாமல் இருந்தேன்.தற்போது கடந்த 10 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.அதனால்,இந்த மாரத்தான் போட்டியில் 21 கிமீ ஓடியது சாத்தியமானது.

ஏற்கனவே திமுக ஆட்சியில் விளையாட்டு பயிற்சிகளுக்கான விழிப்புணர்வு,மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது.ஆனால்,கடந்த ஆட்சியில் அதில் கவனம் செலுத்தத் தவறவிட்டனர். எனினும்,தற்போது இளைஞர்கள்மேல் அக்கறை கொண்டுள்ள அரசு வந்திருப்பதால், எதிர்காலங்களில் இதுபோன்ற விளையாட்டுகளுக்குத் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டெங்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு நேற்று இரவு 5 லட்சம் தடுப்பூசிகள் வந்தது என்றும் தெரிவித்தார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 11 ஜூலை 2021