மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

ஆன்லைன் ஸ்டோரியும் அதனோட மாரலும்

ஆன்லைன் ஸ்டோரியும் அதனோட மாரலும்

அ. குமரேசன்

“சில்ரன்… இப்ப என்ன கிளாஸ்னு டூ யு நோ?”

“யெஸ் மேம்…. வி நோ மேம்.”

“வெரி குட். எங்க சொல்லுங்க பார்க்கலாம், நவ் வாட் கிளாஸ்?”

“ஸ்டோரி டெல்லிங் கிளாஸ் மேம்.”

“யெஸ். இப்ப உங்களுக்கு ஐயாம் கோயிங் டு டெல் எ ஸ்டோரி. ஓகே? ஸ்டோரின்னா என்ன?”

“கதை மேம்.”

“கரெக்ட். நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். நவ் ஆல் ஆஃப் யு மியூட் யுவர் டிவைஸ். கீப் வீடியோ ஆன்.. டேக் யுவர் நோட்புக் அண்ட் பென்சில்…. ஓகேயா?“‘

….

“வாட் சில்ரன்? ஒய் எனிபடி நாட் ஆன்ஸரிங் மீ?”

….

“ஒய் சில்ரன்? ஆன்ஸர் மீ…”

“மேம்… நான் ஓகேன்னு ஆன்ஸர் பண்ணேன் மேம். ஆனா மியூட் பண்ணியிருந்ததாலே உங்களுக்குக் கேட்கல.”

“ஓ… ஓகே, ஓகே. ஆல் ஆஃப் யு நவ் அன்மியூட். ஆனா, நான் கேட்கிறப்ப மட்டும் ஆன்ஸர் பண்ணினா போதும். ஓகேயா, நவ் லிஸன் தி ஸ்டோரி. ஒன்ஸ் தேர் வாஸ் எ கார்ப்பெண்டர். உங்களுக்கெல்லாம் கார்ப்பெண்டர்னா யாரு தெரியும்ல?”

“யெஸ் மேம். கார்ப்பெண்டர்னா மரத்துலேயிருந்து டேபிள், சேர், டோர் எல்லாம் செய்றவர்.“

“வெரி குட். இப்ப ஆல் ஆஃப் யூ ரைட் தி வெர்ட் கார்ப்பெண்டர். சி…ஏ…ஆர்…பி…இ…என்…டி…இ…ஆர்…. எழுதிட்டீங்களா? ஷோ யுவர் நோட்புக் இன் ஃபிரன்ட் ஆஃப் யுவர் மொபைல் கேமரா…”

………

“சூப்பர். ஆல் ஆஃப் யு ரோட் கரெக்ட்லி. தி கார்ப்பெண்டர் வாஸ் கட்டிங் எ லாக். காம்பவுன்டர் வாஸ்…?”

“வாஸ் கட்டிங் எ லாக், மேம்.”

“எக்ஸாட்லி. நவ் ரைட் லாக்… எல்…ஓ….ஜி…. லாக்.”

….

“ஃபைன். யூ ரோட் இட் கரெக்ட்லி. தென், எ மங்கி வாஸ் வாட்ச்சிங் வாட் தி கார்ப்பென்டர் வாஸ் டூயிங். வென் நூன் டைம் கேம், வாட் டிட் ஹி டூ? எனி ஆஃப் யு நோ?”

……….

“யெஸ். ஹி ஸ்டாப்ட் ஹிஸ் வொர்க். ஹி புட் எ வெட்ஜ் – அதாம்பா ஆப்பு – இன் தி கிராக் ஆஃப் தி லாக். எங்க, இப்ப டபிள்யூ… இ… டீ… ஜி…. இ… வெட்ஜ் – எழுதிக் காட்டுங்க பார்க்கலாம்…. வெரி குட்.…”

….

“ஆஃப்டர் புட்டிங் தி வெட்ஜ் இன் தி கிராக் ஆஃப் தி லாக், தி கார்ப்பெண்டர் வென்ட் டூ ஹேவ் ஹிஸ் லஞ்ச்…. அவரு லஞ்ச் சாப்பிடப் போனப்ப, தி மங்கி வாட்ச்சிங் தி கார்ப்பென்டர் கட்டிங் தி லாக் யூ ஸீ… இட் வாஸ் வெரி கியூரியஸ் டூ தி சேம் ஒர்க். இப்ப எல்லாரும் கியூரியஸ் எழுதிக்காட்டுங்க… சி… யு… ஆர்… ஐ… ஓ… யு… எஸ்…. வெரி குட்…”

……..

“ஸோ தி மங்கி வென்ட் நியர் தி லாக், சேட் ஆன் இட் அண்ட் டிரைய்டு டு புல் அவுட் தி வெட்ஜ். அஸ் ஸூன் அஸ் தி வெட்ஜ் வாஸ் ரிமூவ்ட், என்ன நடந்துச்சு தெரியுமா சில்ரன்? தி கிராக் வாஸ் க்ளோஸ்ட், மங்கியோட டெய்ல் வாஸ் காட் பிட்வீன் தி கிராக்… தி மங்கி பிகேன் டு கிரை லௌட்லி… எல்லாரும் டெய்ல் எழுதுங்க பார்க்கலாம் …. டி… எ… ஐ… எல்…..டெய்ல்…”

…….

“வெரி குட்… எல்லாரும் ரோட் தி ஸ்பெல்லிங் கரெக்ட்லி… வாட் சுஜிதா? ஒய் ஆர் யு ரெய்ஸிங் யுவர் ஹேண்ட்? தருண், யு ஹேவ் ஆல்ஸோ ரெய்ஸ்ட் யுவர் ஹேண்ட். நவ் டெல் மி ஒய்…”

“மேம்… நான் இன்னும் எழுதியே முடிக்கலை மேம். பாதிதான் எழுதியிருக்கேன்…”

“மேம்… நானும் இப்பதான் எழுதிட்டிருக்கேன்…”

“ஓ… ஓகே… யு ரைட் இட் ஆஃப்டர் தி கிளாஸ் இஸ் ஓவர் அண்ட் ஷோ டுமாரோ. ஓகேயா? இப்ப லெட்ஸ் நோ தி மாரல் ஆஃப் தி ஸ்டோரி. கதையிலேயிருந்து நாம என்ன தெரிஞ்சிக்கிடுறோம்னா, வீ ஷுட் நாட் இண்டல்ஜ் இன் திங்ஸ் விச் வீ டூ நாட் நோ ஃபுல்லி அண்ட் வீ ஷுட் நெவர் மெடில் வித் அதர் பீப்பிள்ஸ் ஒர்க்ஸ். நமக்கு முழுசாத் தெரியாத விசயங்கள்ல தலையிடக்கூடாது, மத்தவங்களோட ஒர்க்ஸ்ல மூக்க நீட்டக்கூடாது… ஓகே, லெட்ஸ் மீட் டுமாரோ…”

“மேம்…”

“சொல்லு கண்ணா?”

“கதை சொல்றேன்னு சொன்னீங்க, இன்னமும் சொல்லலியே?”

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 11 ஜூலை 2021