மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

12,500 கிராமங்களுக்கு ஃபைபர் நெட்: அமைச்சர் மனோ தங்கராஜ்

12,500 கிராமங்களுக்கு ஃபைபர் நெட்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் 12,500 கிராம பகுதிகளுக்குத் தங்குதடையின்றி பைபர் நெட் மூலம் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் கிராமப் பகுதிகளில் போதிய இணைய வசதி இல்லாததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும்போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர். செல்போன் சிக்னலுக்காக மாணவர்கள் மலையின் உச்சிக்கும், உயர்ந்த கட்டிடங்களின் உச்சிக்கும், தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்தும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருவதாகத் தினசரி செய்திகள் வெளியாகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் டவர் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க, செல்போன் சிக்கெனலுக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறும் நிலை உள்ளதாக அப்பகுதி மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்று மாணவர்கள் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்குத் தங்குதடையின்றி இணையச் சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கிராம பகுதிகளில் தங்குதடையின்றி இணைய வசதி கிடைக்க ஃபைபர் நெட் மூலம் இணையச் சேவை திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். இதன் மூலம் 12,500 கிராமங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர ஓராண்டுக்காலம் தேவைப்படும் என்பதால் மாற்று ஏற்பாடாக மற்ற இணையச் சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து கிராமப் பகுதிகளுக்கு இணையச் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

ஞாயிறு 11 ஜூலை 2021