மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

கொங்கு நாடு: திமுக கூட்டணியின் எதிர்க்குரல்!

கொங்கு நாடு: திமுக கூட்டணியின் எதிர்க்குரல்!

ஒன்றிய இணை அமைச்சராக ஜூலை 7ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவிக்கப்பட்டார். பதவியேற்பதற்கு முன்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அமைச்சர்கள் பற்றிய குறிப்பில் எல்.முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு என்று இருந்தது. ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ குறிப்பிலேயே கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கிற ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக அரசு பயன்படுத்தத் தொடங்கிய நிலையில் இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சட்டப்படி இதை ஒன்றும் செய்ய முடியாது என்பதால், அவர்கள், கொங்கு நாடு என்ற புதிய வார்த்தைப் பிரயோகத்தைக் கையிலெடுத்தனர். சேர, சோழ, பாண்டிய நாடு என்பதைப் போல கொங்கு நாடு என்பது தற்போதைய இந்திய அரசியல் அமைப்பு உருவாவதற்கு முன்பிருந்த ஓர் இடவாகு பெயர்.

ஆனால், ஒன்றிய அரசின் அதிகாரபூர்வக் குறிப்பில் தமிழ்நாட்டுக்குள் கொங்கு நாடு என்ற ஒரு பிரிப்பை உருவாக்கும் வகையில் கருத்துருவாக்கம் செய்யும் வகையில் எல்.முருகனுக்கு கொங்கு நாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி சிலர் கொங்கு நாடு என்பது தனியாக பிரிக்கப்பட்டு அங்கே பாஜக கவனம் செலுத்தப் போகிறது என்று கருத்துகளை வெளியிட்டார்கள்.

பாஜகவினரும், சில கொங்கு பிரமுகர்களும் இதை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று (ஜூலை 10) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த கருத்தில், “கொங்கு நாடு முழக்கம் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமானது. இதை அரசியல் அறிவு சார்ந்த ஒன்றாக நான் பார்க்கவில்லை. மத்திய என்பது தொடர்பில்லாத சொல், ஒன்றியம் என்பது இணைந்த என்ற பொருளில் உயர்ந்த சொல். ஒன்றியம் என்ற சொல் அரசியல் அமைப்பில் இருக்கிறது. தமிழும் தெரியாது, அரசியல் அறிவும் கிடையாது, அரசியல் அமைப்பு சாசனத்தையும் தெரியாது என்ற நிலையில் சிலரின் உளறல்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று கேட்டிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று (ஜூலை 10) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திடீரென புதிய பிரச்சினையை பாஜக கிளப்பிவிட்டிருக்காங்க. தமிழ்நாட்டைப் பிரிச்சு கொங்கு நாடுனு பிரிச்சு அதை யூனியன் பிரதேசமா மாத்தப் போறதா தகவல் பரப்பிவிட்டிருக்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பா வன்மையா கண்டிக்கிறேன்.

மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பல்வேறு கூறுகளாகப் பிரிக்கும் எந்த முயற்சிக்கும் தமிழ்நாட்டு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுக்குள்ள கொல்லைப்புற வழியாக நுழைய பிஜேபி முயற்சி செய்தால், அதற்கு எதிர்விளைவைதான் பிஜேபி சந்திக்கும். அனைத்து கட்சிகளும் சேர்ந்து இதை எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

திமுக கூட்டணியின் தலைமை கட்சியான திமுக இதை சிறுபிள்ளை விளையாட்டு என்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியோ ஆபத்தானது என்கிறது.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 11 ஜூலை 2021