மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

பணமோசடி வழக்கு: நேரில் ஆஜராவதிலிருந்து அமைச்சருக்கு விலக்கு!

பணமோசடி வழக்கு: நேரில் ஆஜராவதிலிருந்து அமைச்சருக்கு விலக்கு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றாம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று(ஜூலை 9) விசாரணைக்கு வந்தது.

அப்போது, புகார்தாரர் தரப்பில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், செந்தில்பாலாஜி அமைச்சராக உள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக நிர்பந்திக்கப்படுவதால், அமைச்சர் பணியை மேற்கொள்ள இயலவில்லை. அதனால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 10 ஜூலை 2021