மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

ஜெ,நினைவிடத்தில் நான் செய்த சபதம்: சசிகலா

ஜெ,நினைவிடத்தில் நான் செய்த சபதம்:   சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று அதில் இருந்து விடுதலையாகி வந்த பிறகு பத்திரிகை, பேட்டிகளை தவிர்த்த சசிகலா முதல் முறையாக ஓர் ஆங்கில இதழுக்கு (தி வீக்) பேட்டியளித்துள்ளார். பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது அலைபேசி மூலம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் உரையாடி வரும் சசிகலா, ‘கட்சியை சரிபண்ணிடுவோம். கவலைப்படாதீங்க’என்று அவர்களுக்கு சொல்லி வருகிறார். தொண்டர்களுடனான இந்த உரையாடல், அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் தான் மேற்கொண்ட சபதத்தின் தொடர்ச்சிதான் என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா.

2017 பிப்ரவரி 15 ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றதால் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு சிறைக்கு செல்ல தயாரானார் சசிகலா. பெங்களூருவுக்குப் புறப்படுவதற்கு முன்பு சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று, ஓங்கியடித்து சபதம் செய்தார் சசிகலா.

ஆத்திரமும் அழுகையுமாக அன்று அவர் செய்த சபதம் என்ன என்று இன்று இப்போது தி வீக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் சசிகலா தெரிவித்துள்ளார்.

“ சிறைக்கு செல்வதற்கு முன்பாக அக்காவின் நினைவிடத்துக்குச் சென்றேன். அங்கே, ‘அக்கா நான் திரும்பி வருவேன். நம் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை எல்லாம் தோற்கடித்து நம் கட்சியைக் காப்பாற்றுவேன்’ என்று சொல்லி ஓங்கியடித்து எனக்குள் நானே சபதம் எடுத்துக்கொண்டேன். அந்த சபதத்தை நிறைவேற்றும் முயற்சியில்தான் நான் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் சசிகலா.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 10 ஜூலை 2021