மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

’அள்ள அள்ள குறையாத தமிழ் பண்பாட்டு செல்வம்’: அமைச்சர் ட்வீட்!

’அள்ள அள்ள குறையாத தமிழ் பண்பாட்டு செல்வம்’: அமைச்சர் ட்வீட்!

கீழடியில், சுடு மண்ணால் ஆன அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, ’கீழடி, அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்’ என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணியை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. நான்கு முதல் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.

ஆறாம் கட்ட அகழாய்வில், கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்றது. அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், ஐந்து அடுக்குகளுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைத்தது.

ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

கடந்த ஜூலை 4ஆம் தேதி கீழடி அருகே கொந்தகையில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள். 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று கணேசன் என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட 7 குழிகளில் 6வது குழியில் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

77 செ.மீ அகலமும், 44 செ.மீ உயரமும், 2 செ.மீ தடிமனும் கொண்ட தொட்டியில் அமைந்துள்ள அலங்கார வேலைப்பாடுகள் தொல்லியல் வல்லுநர்களை கவர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில்,” முழுவதுமாக தோண்டும்போதுதான் தொட்டியின் உயரம், அகலம் முழுவதுமாக தெரியும். பின்புதான், அது தொட்டியாக அல்லது கொள்கலனாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெரிய வரும்” என்றார்.

கீழடியில் சுடு மண்ணால் ஆன அழகிய வேலைபாடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தொட்டியை பார்த்து நெகிழ்ந்து போன தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “கீழடி, அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 10 ஜூலை 2021