மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

சிலைக் கடத்தல் : எச்சரிக்கும் அமைச்சர்!

சிலைக் கடத்தல் : எச்சரிக்கும் அமைச்சர்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில் சிலைகளை மாற்றியவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் இன்று(ஜூலை 10) ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் கடந்த பத்தாண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, குடமுழுக்கு விழாக்களும் நடைபெறவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 12 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த கோயில்களின் எண்ணிக்கையை கண்டறிந்து, புனரமைத்து குடமுழுக்கு நடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையை பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து, அங்கு மேலும் ஒரு கோசாலையை ஏற்படுத்தி பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்கள், ஒரு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அர்ச்சகர்கள், நாவிதர்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ஆம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படும். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்று முடியும் வரை கோயில்களில் அன்னதானம் பொருளாக மட்டுமே வழங்கப்படும். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யபடுவார்கள். கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாடு விரைவில் விடை பெற்று நலம் பெற இறைவனை வேண்டுவோம். அதிமுக ஆட்சியில் 2018ல் ஸ்ரீ ரங்கம் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் பதியப்பட்ட சிலை கடத்தல் வழக்குகளின் உண்மை தன்மைக்கேற்ப தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

சனி 10 ஜூலை 2021