மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

சிறையிலிருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூலை 10) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு ,கடந்த மே 28ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

பரோல் காலம் முடிவடைந்து ஜூன் 28ஆம் தேதி மீண்டும் பேரறிவாளன் சிறைக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அவருக்கு பரோல் வழங்கியது தமிழக அரசு.

இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் தங்கி தனது வீட்டிலிருந்த படியே சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுக்குச் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிறுநீரக தொற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அண்ணன் தியாகராஜனின் மரகதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

சனி 10 ஜூலை 2021