மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

நகராட்சி ஆணையர்கள் மாற்றம் ஏன்?

நகராட்சி ஆணையர்கள் மாற்றம் ஏன்?

தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சி ஆணையர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் காந்தி ராஜ் பல்லாவரம் நகராட்சிக்கும்,

கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி காஞ்சிபுரம் நகராட்சிக்கும்.

காரைக்குடி நகராட்சி ஆணையர் லட்சுமணன் தாம்பரம் நகராட்சிக்கும்,

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், மறைமலை நகர் நகராட்சிக்கும்

தர்மபுரி நகராட்சி ஆணையர் தனுமூர்த்தி பொள்ளாச்சி நகராட்சிக்கும்,

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கும்,

கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் காரைக்குடிக்கும்,

ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் உதகைக்கும்,

ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் கொடைக்கானலுக்கும்

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா திருவண்ணாமலைக்கும்,

கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி கரூருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோன்று கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராக முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி ஆணையர்கள் மாற்றப்படுவது குறித்து விசாரித்ததில், வீட்டு வரி குறைப்பு , நகராட்சி பகுதிகளில் வீடு கட்ட ஒப்புதல் ஆகியவற்றுக்கு கமிஷன் பெறப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைகின்றனர். எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல அதிகாரிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால், தாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கே நிறைய பணம் கொடுத்துத்தான் வருகிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இந்த தகவல் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்துக்குச் சென்ற நிலையில், பணியிடமாறுதலுக்கு யாரும் எந்த பணமும் வாங்கக் கூடாது என்பதற்காக நகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்” என்கின்றனர் அத்துறை வட்டாரத்தில்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

சனி 10 ஜூலை 2021