மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

எப்படிச் செயல்படுவேன்? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்!

எப்படிச் செயல்படுவேன்?  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்!

தமிழக பாஜகவின் தலைவராக 36 வயதேயான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய தமிழக பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய இணையமைச்சர் ஆக பதவியேற்றுள்ள நிலையில், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில் அடுத்த நாளே முருகனுக்கு மாற்றாக ஜூலை 8 ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை இன்று (ஜூலை 9) கோவை சிரவை ஆதீனத்துக்கு சென்று ஆசிபெற்றார். அண்ணாமலைக்கு பல தரப்பினரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த முருகனுக்கு சீனியர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற புகைச்சல் தமிழக பாஜகவில் இருந்தது. இந்நிலையில் முருகனை விட இளையவரான அண்ணாமலைக்கு தமிழக பாஜகவின் சீனியர்கள் மற்ற நிர்வாகிகள் எவ்வாறு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் தனது செயல் திட்டம் என்ன, அணுகுமுறை என்ன என்பது பற்றி தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை இன்று தெரிவித்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில்,

“நமது தேசிய தலைவர் ஜே.பி. நட்டா எனக்கு வழங்கியிருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச் செய்கிறது. நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரிய கர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும் மற்றும் தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழி நடத்தப்பட்டுளளது. தமிழ்நாட்டில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன் ஒரு அணியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய தலைவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தமிழ்ப்பற்றும் நமது தமிழ் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும் உயிரான தேசப்பற்றையும் தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம்”என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

வெள்ளி 9 ஜூலை 2021