மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ஹெச்.எம். போல முதல்வர் வேலை வாங்குகிறார்: அன்பில் மகேஷ்

ஹெச்.எம். போல முதல்வர் வேலை வாங்குகிறார்:  அன்பில் மகேஷ்

முதல்வர் ஸ்டாலின் தலைமை ஆசிரியர் போல் வேலை வாங்குவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுபோன்று உதவிகளைச் சேவையாகச் செய்து வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”கொரோனா காரணமாக மக்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருவதால், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதனால் 75 சதவிகித கட்டணம்தான் வசூலிக்க வேண்டும், அதுவும் 40 சதவிகிதம் முதலிலும் மீத தொகையை இரண்டு மாதங்கள் கழித்து வசூலித்துக்கொள்ளலாம் எனவும் அரசு உத்தரவிட்டது.

அரசின் இந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து பெற்றோர்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், அதன்பிறகு 2017-18ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்து பணி கிடைக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் விவகாரத்தில், அரசு ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. நீட் மட்டுமின்றி எந்தவித நுழைவுத் தேர்வையும் தமிழகத்துக்குள் அனுமதிக்காமல் திமுக குரல் கொடுக்கும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம். ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்தில் தினமும் சமர்ப்பித்து வருகிறோம்.

கொரோனா 3ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். எனவே மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம், சுகாதாரத் துறையினரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். அதுபோன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்கள் வெளியிடப்படும்” என்றார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 9 ஜூலை 2021