மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

நன்றி அறிவிப்பை இப்படிச் செய்வோம்: உதயநிதி

நன்றி அறிவிப்பை இப்படிச் செய்வோம்: உதயநிதி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரிய அளவு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து இரு மாதங்கள் ஆகிவிட்டாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் எந்த கட்சியும் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தமுடியவில்லை. இந்த நிலையில் நன்றி தெரிவிப்புக் கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு யோசனையை முன் வைத்துள்ளார்.

இன்று (ஜூலை 9) சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் உதயநிதி ஸ்டாலின். ஏற்கனவே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து , 25 மாணவருக்கு அண்மையில் கல்வி உதவித்தொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், 2 வது கட்டமாக 51 பள்ளி,கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித்தொகையை இன்று வழங்கினார்.

இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,

“ ஒரு வாரத்துக்கு முன்புதான் இதே டெக்கான் ஃபவுண்டேஷன் சார்பாக 25 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்திருந்தோம். இன்று 51 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறோம். 100 மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 100 போதாது. இந்த கல்வி உதவியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த டெக்கான் ஃபவுண்டேஷனுக்கு நன்றி. நீங்கள் கொடுப்பது போதாது, எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஏனென்றால் என்னிடம் 100 மனுக்கள் வந்தால் அதில் 60 முதல் 70 மனுக்கள் கல்வி உதவி தொடர்பாகத்தான் கேட்கிறார்கள்.

பல்வேறு வகையான கோரிக்கைகள் வைக்கிறார்கள். என்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி வருகிறேன். இதில் முக்கியமான பணி இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் பணி.

இந்தத் தொகுதியில் நான் வெற்றிபெற்று இதுவரைக்கும் நன்றி அறிவிப்புக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நன்றி அறிவிப்புக் கூட்டமாகக் கருதி உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். . இந்த தொகுதியில் 3 நாட்கள்தான் பிரச்சாரம் செய்தேன். தமிழகம் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றியைக்கொடுத்த மக்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மூலமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொகுதி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”என்று கூறிய உதயநிதி தொடர்ந்து,

“கழக ஆட்சி பொறுப்பேற்கும்போது கொரோனா இரு மாதம் முன்பு அபாயகரமான சூழலில் இருந்தது. இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. தலைவரின் ஆலோசனையின்படி அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் செயல்பட்டோம்.

கழக ஆட்சி வந்தபிறகு தடுப்பூசி நிறைய போட ஆரம்பித்தோம். ஒவ்வொரு நாளைக்கும் 5 லட்சம் தடுப்பூசிகள் நமது ஆட்சியில்தான் போடப்பட்டது. இப்போது எல்லா ஊசியும் போட்டாச்சு. தடுப்பூசி இல்லை. ஒன்றிய அரசு தயவு செய்து தடுப்பூசிகளை போதுமான அளவில் தர வேண்டும்.” என்ற உதயநிதி, “கல்வி உதவி உள்ளிட்ட எந்த உதவியாக இருந்தாலும் என் அலுவலகம் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்” என்று சொல்லி முடித்தார்.

-வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 9 ஜூலை 2021