மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

துறையின் கீழுள்ள பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர்!

துறையின் கீழுள்ள பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான பள்ளி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இப்பள்ளிக்கு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டது. இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கான மராமத்து பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்று(ஜூலை 9) தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” இந்து அறநிலைய துறை சார்பில் ஏற்கனவே 6 கல்லூரிகளும், 44 பள்ளிகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் கோயில் ஆய்வு பணியின்போது அந்தந்த மாவட்டங்களிலுள்ள கல்லூரி, பள்ளிகளில் முதல்வரின் உத்தரவின்பேரில் ஆய்வு செய்து வருகிறோம். துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர கல்வி நிலையங்களையும் மேம்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சிபுரம் பள்ளியில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு 37 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். 700 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் வருகிற ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக மாற்றும் அளவிற்கு பள்ளியின் தரத்தை உயர்த்துவோம். எல்.கே.ஜி வகுப்பிற்கு 10 ஆயிரமாக இருந்த பள்ளி கட்டணத்தை 5 ஆயிரமாக குறைத்துள்ளோம். அதுபோன்று, 11ஆம் வகுப்பிற்கு 20 ஆயிரமாக இருந்த கட்டணத்தை 10 ஆயிரமாக குறைத்துள்ளோம். மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு சீருடை, எழுது பொருட்கள், நோட்டு மற்றும் புத்தகம் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 9 ஜூலை 2021