மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

பி.எம்.கேர்ஸில் வெளிப்படைத்தன்மை இல்லை: பழனிவேல் தியாகராஜன்

பி.எம்.கேர்ஸில் வெளிப்படைத்தன்மை இல்லை: பழனிவேல் தியாகராஜன்

பி.எம். கேர்ஸ் நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இணைந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தைத் தொடங்கி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயக நாட்டில் அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வெளிப்படைத்தன்மை.முதல்வரின் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள், எதற்கு செலவிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். முன்பு செயல்பட்டுக்கொண்டிருந்த முதல்வரின் நிவாரண நிதி இணையதளம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

எனவே மே 6ஆம் தேதிக்கு முன்னதாக வந்த நிதியை எல்லாம் தனி கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். மே 7ஆம் தேதிக்குப் பிறகு வந்த நிதியை கொரோனா என்ற தலைப்பில் ஏற்றி, அதுதொடர்பான ரிப்போர்ட்டை தினசரி உருவாக்கி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் வெளிப்படைத்தன்மை இருக்கும்.

ஒன்றிய அரசின் பி.எம்.கேர்ஸ் இணையதளத்தில் வெளிப்படைத் தன்மை கிடையாது. எங்கிருந்து பணம் வருகிறது, எதற்காகச் செலவு செய்யப்படுகிறது என எந்த தணிக்கையும் செய்யப்படுவதில்லை. தற்போது இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காட்டும் வகையில் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது.

ஜூலை 8ஆம் தேதி வரை 472 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ளது. முதல் அலையிலிருந்து தற்போது ஆட்சி மாற்றம் வரையில் 14 மாதங்கள் 400 கோடி ரூபாய்தான் பேரிடர் நிவாரண நிதிக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த 2 மாதத்தில் 472 கோடி ரூபாய் வந்திருக்கிறது. முதல்வர் மீதும், இந்த அரசின் மீதான நம்பிக்கையால் தான் இவ்வளவு நிதி வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுவரை கொரோனா நிவாரண நிதியிலிருந்து 241 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும் என்றார்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வெள்ளி 9 ஜூலை 2021