மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ஜிகா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு 137 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் வார்டை தொடங்கி வைத்தார்.

பின்பு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகளுடன் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும், பழைய கட்டிடங்களை புதுப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் கட்டடங்களில் எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் தேவை என்பதை மாவட்ட ஆட்சியர் வரைவு தயாரித்து ஒரு மாத காலத்திற்குள் துறைக்கு அனுப்புவார். அதன்பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 10,839 சுகாதார மையங்களின் கட்டடங்களை சீரமைக்கவும், மருந்து தேவையை அதிகரிக்கவும், உபகரணங்களை கூடுதலாக வாங்கவும் 15வது நிதி நிலை குழுவிலிருந்து ரூ.4279 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்து, தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. ஜிகா வைரஸின் தன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அந்த வைரஸ் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அத்திட்டத்தின்படி, சுகாதார அலுவலர்கள் வீடுதோறும் சென்று மருத்துவ சோதனைகளைச் செய்து சிகிச்சைகளை வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 9 ஜூலை 2021