மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

மேகதாது : அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு!

மேகதாது : அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு!

மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முதல்வர் தீவிரம் காட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சர் செகாவத்தை ஜூலை 6ஆம் தேதி சந்தித்து பேசினார். அப்போது இரு மாநில அரசையும் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாக துரைமுருகன் கூறினார்.

இதனிடையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற எடியூரப்பாவின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “மேகதாது அணை பிரச்சினை குறித்துக் கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வெள்ளி 9 ஜூலை 2021