மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

பல்கலைக்கழகங்களில் முறைகேடு : விசாரணை குழு அமைப்பு!

பல்கலைக்கழகங்களில் முறைகேடு : விசாரணை குழு அமைப்பு!

சேலம் பெரியார் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பதவி உயர்வு‌ உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌ குறித்து நாளிதழ்களில்‌ செய்திகள்‌ வெளியாகியுள்ளன. மேலும்‌, மதுரை காமராஜர்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகங்களில்‌ மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்‌ பதவி உயர்வுகளில்‌ முறைகேடுகள்‌ நடைபெற்றுள்ளதாக‌ புகார்‌ மனுக்கள்‌ அரசுக்கு வந்துள்ளன. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடந்த ஜூன் 13ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்கல்வித் துறை இன்று(ஜூலை 9) வெளியிட்டுள்ள அரசாணையில், “சேலம் பெரியார், மதுரை காமராஜர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த செய்திகள், வரபெற்ற புகார்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா, அரசு இணை செயலாளர்கள் இளங்கோ, ஹென்றிதாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 9 ஜூலை 2021