மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

சிறந்த 21 எழுத்தாளர்களுக்கு விருதும், ஊக்கத்தொகையும்!

சிறந்த 21 எழுத்தாளர்களுக்கு விருதும், ஊக்கத்தொகையும்!

சென்னை தலைமை செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பாக சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு விருதும், ரூ.40,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறந்த படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முதல் தவணைத் தொகையாக தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.

விருதுபெற்ற எழுத்தாளர்கள்

முனைவர் ந.அறிவரசன்- கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்,

திருமதி.எஸ்.வசந்தா -திருக்குறளில் பௌத்தம்

திரு.எம்.பிரேம்குமார்-மாமன்னர் அசோகர்

முனைவர் சு.அ. அன்னையப்பன் - தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன்,

திரு.சு.சுகிர்தராஜா - வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி,

திருமதி.இரா.கலாராணி- பௌத்த தியானம்,

திருமதி.டி.மோனிகா - பேரறிஞர் அம்பேத்கர்,

திரு.மு.ரமேஷ் - சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்

செல்வி.கே. பரமேஸ்வரி - தடை அதை உடை புதிய சரித்திரம் படை - உளவியல் கட்டுரை,

திரு.அன்பாதவன் - இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை,

திரு.ம.இளங்கோவன்- தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள்

திரு.அ.கருப்பையன்- தடையும் ஒரு நாள் உடையும்,

திரு.ச. சண்முகசுந்தரம் - குப்பத்து ராஜாக்கள்,

முனைவர் க. மோகன்- உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்,

திரு.எ. பாரதிராஜா - வெற்றி முழக்கங்கள்,

முனைவர் செ. காளிமுத்து- தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,

திரு. அண்டனூர் சுரா - எத்திசை செலினும்,

திரு. மீனாசுந்தர் (எ) மா. மீனாட்சி சுந்தரம் - படைப்பு வெளியில் பதியும் பார்வைகள்,

திருமதி.ஆர்.கமலம் சின்னசாமி - நலம் தரும் நாட்டு வைத்தியம்,

முனைவர் ம. ராஜா - உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைகள்-ஓர் பன்முகப் பார்வை - கட்டுரைத் தொகுப்பு,

திரு.மு.வெ.ஆடலரசு - இசை மொழியும், ஆதி இனமும்

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சோ. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 9 ஜூலை 2021