மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், மீன்வளம் கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால், தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், விருப்ப ஓய்வு பெற்ற கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பேச்சுகள் அடிபட்டன.

இந்த நிலையில், நேற்று மாலை பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

கர்நாடக மாநில பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் தெற்கு பெங்களூரு துணை ஆணையராக பதவியில் இருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தபோது அவர் அரசியலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கவில்லை.

பின்னர் 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறிய போது , அச்சமின்மை, தைரியம், ஊக்கம், அறிவு ஆகியவற்றைப் பிரதமர் மோடியிடமும் பாஜக தலைவர்களிடமும் நான் காண்கிறேன். இதன் காரணமாக பாஜகவில் இணைந்து கட்சியை வலுப்படுத்த முடிவு செய்தேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் பாஜகவிற்கு வந்தேன். தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்பேன் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

தற்போது தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வெள்ளி 9 ஜூலை 2021