மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

அறிக்கை தயாரானாலும், சமர்ப்பிக்க முடியாது: ஏ.கே.ராஜன் குழு!

அறிக்கை தயாரானாலும், சமர்ப்பிக்க முடியாது: ஏ.கே.ராஜன் குழு!

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அறிக்கை தயார் செய்தாலும் அரசிடம் அளிக்க முடியாத நிலை உள்ளது என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று வழிகள் குறித்து ஆராய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. இக்குழு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் மற்றும் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தி அறிக்கையை தயார் செய்து வருகின்றது.

இக்குழுவின் நான்காவது ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூலை 8) சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன், “ நான்காவது முறையாக இன்று நாங்கள் கூடி ஆலோசித்துள்ளோம். வரப்பெற்ற தகவல்களை ஆய்வு செய்து, ஒரளவு முடிவு செய்கிற நிலைக்கு வந்துள்ளோம். இன்னும் சில தகவல்களை ஆராய வேண்டியுள்ளது. நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. மிக விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும். அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், அறிக்கையை சமர்பிப்பது முறையாக இருக்காது. நானே ஒரு நீதிபதியாக இருந்துகொண்டு வழக்கு இருக்கும்போது அறிக்கையை சமர்பிப்பது நல்லதல்ல. அந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பின்னரே, அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றுதான் கருத்துதெரிவித்துள்ளனர். எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வந்தபிறகு மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 24*7 என்ற அளவில்தான் எங்கள் குழு பணிகளை மேற்கொண்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.

இக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 8 ஜூலை 2021