மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

‘இது எனது சொந்த கருத்து’: சிவி சண்முகம்

‘இது எனது சொந்த கருத்து’: சிவி சண்முகம்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்த தன்னுடைய கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

பாஜகவால் தான் அதிமுக தோற்றது என சி.வி.சண்முகம் கூறியது அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் “உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என்று தெரிவித்தார்.

இந்தச்சூழலில் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், ”அதிமுக தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும், நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் பேசியது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறுகையில், “தன்னுடைய கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பத்திரிகை ஒன்றில் நான் சொன்ன கருத்தையும், சொல்லாத கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதிமுக தோல்வி குறித்து நான் கூறியது எனது சொந்த கருத்து. அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னிடம் கேட்டபோதும் எனது சொந்த கருத்து என்றே நான் தெரிவித்தேன்.

நாங்கள் பல கருத்துகளைப் பேசுவோம். ஆனால் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ. அந்த முடிவின்படி நாங்கள் செயல்படுவோம். அதுதான் எங்களின் முடிவு. பாஜகவினர் அவர்களுடைய கருத்தைக் கூறுகின்றனர். ஆனால் நான் சொல்லாததைச் சொன்னதாக வெளியிட்டிருக்கிறார்கள். இது தவறானது” என்று கூறியுள்ளார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 8 ஜூலை 2021