மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

தரவுகளைப் பகிர்கிறதா ட்ரூ காலர்? : ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

தரவுகளைப் பகிர்கிறதா ட்ரூ காலர்? : ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

பயனர்களின் தரவு மற்றும் தனி நபர் உரிமையை மீறியதாக ட்ரூ காலர் செயலிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசாங் போஸ்டர் என்பவர் ட்ரூ காலர் செயலிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ட்ரூகாலர் இன்டர்நேஷனல் எல்எல்பி நிறுவனம் செல்போன்களில் பயன்படுத்தப்படும் ’ட்ரூ காலர்’ செயலியை இயக்குகிறது. இதன்மூலம், பயனர்களின் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. ஆனால் பயனர்களின் அனுமதி இன்றி அவர்களின் தரவுகளை இந்நிறுவனம், தனது கூட்டு நிறுவனத்துடன் பகிர்கிறது. இது பயனர்களின் தனியுரிமையை மீறுவதாகும்.

மேலும், பயனர்களின் அனுமதி இன்றி, தனது யுபிஐ (ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI)) பயன்பாட்டினை பயன்படுத்த கட்டாயமாகப் பதிவு செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (ஜூலை 7) நீதிபதிகள், தீபங்கர் தத்தா , கிரிஷ் எஸ் குல்கர்னி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ட்ரூ காலரின் தரவுகள் பயன்பாட்டாளர்கள் யார் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில், கூகுள் இந்தியா, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த மனு தொடர்பாக, ஒன்றிய அரசு, மகாராஷ்டிரா அரசு, மாநில ஐடி துறை, ட்ரூ காலர் நிறுவனம். தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி ஆகியோர் ஜூலை 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ட்ரூ காலர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டிலேயே யுபிஐ சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ட்ரூகாலர் பயனர்களுக்கும் அவர்களின் தரவு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். ட்ரூகாலர் பயனர் தரவை விற்கவோ பகிரவோ இல்லை. எங்கள் பயனர்கள் மற்றும் அவர்களின் தரவை அக்கறையுடன் கையாள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 8 ஜூலை 2021