மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

ஒன்றிய அமைச்சர்களின் துறைகள்!

ஒன்றிய அமைச்சர்களின் துறைகள்!

தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக நேற்று மாற்றியமைக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அமைச்சர்களின் துறைகள் விவரம்

பிரதமர் மோடி - பணியாளர், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சர்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்

ஒன்றிய அமைச்சர்கள்

ராஜ்நாத்சிங் - பாதுகாப்புத் துறை

அமித்ஷா - உள்துறை, கூட்டுறவு (ஜூலை 6 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட துறை)

நிதின்கட்கரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை

நிர்மலா சீதாராமன் - நிதித்துறை

பியூஷ் கோயல் - வர்த்தகம், தொழிற்துறை; நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை; ஜவுளித்துறை

நரேந்திர சிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவு விவகாரங்கள்

அர்ஜுன் முண்டா - பழங்குடியின விவகாரங்கள்

ஸ்மிருதி இராணி - பெண்கள், குழந்தைகள் நலத்துறை

அனுராக் சிங் தாக்குர் - தகவல் ஒலிபரப்புத்துறை; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

தர்மேந்திர பிரதான் - கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை

பிரஹலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி, கனிம வளம்

நாராயண் ராணே - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை

சர்பானந்த சோனோவால் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழித்துறை; ஆயுஷ்

முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் விவகாரங்கள்

வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

கிரிராஜ் சிங் - கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள்

கிரண் ரிஜிஜு - சட்டம் மற்றும் நீதி

ஜோதிராதித்ய சிந்தியா - சிவில் விமானப் போக்குவரத்து

ராம் சந்திர பிரசாத் சிங் - எஃகு

அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே; தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை

பசுபதி குமார் பராஸ் - உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள்

கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல் சக்தி

ராஜ்குமார் சிங் - மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை

மன்சூக் மாண்டவியா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரத்துறை

பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை

மகேந்திர நாத் பாண்டே - கனரக தொழிற்சாலைகள் துறை

பர்ஷோத்தம் ரூபாலா - மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை

கிஷண் ரெட்டி - கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை

ஒன்றிய இணை அமைச்சர்கள்

அஷ்வினி குமார் செளபே - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்; சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்

ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

மீனாட்சி லேக்கி - வெளியுறவு விவகாரங்கள், கலாசாரத்துறை

ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழி,

ஃபகன்சிங் குலஸ்தே - எஃகு; கிராமப்புற வளர்ச்சி

பிரஹலாத் சிங் படேல் - ஜல சக்தி, உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள்

அர்ஜுன் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; கலாசாரத்துறை

வி.கே.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து

கிரிஷண் பால் - மின்சாரம் மற்றும் கனரக தொழிற்சாலைகள்

தன்வே ராவ்சாகேப் தாதாராவ் - ரயில்வே; நிலக்கரி, கனிமவளங்கள் துறை

சாத்வி நிரஞ்சன் ஜோதி - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், கிராமப்புற வளர்ச்சித்துறை

சஞ்சீவ் குமார் பல்யான் - மீன் வளம், கால்நடை பராமரிப்புத்துறை

நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள்

பங்கஜ் செளத்ரி - நிதித்துறை

அனுப்ரியா சிங் படேல் - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை

எஸ்.பி. சிங் பாகேல் - சட்டம் மற்றும் நீதித்துறை

ராஜீவ் சந்திரசேகர் - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை

ஷோபா கரண்ட்லஜே - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

பானு பிரதாப் சிங் வெர்மா - குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை

தர்ஷணா விக்ரம் ஜார்தோஷ் - ஜவுளித்துறை, ரயில்வே துறை

வி. முரளிதரன் - வெளியுறவு விவகாரங்கள்: நாடாளுமன்ற விவகாரங்கள்

சோம் பர்காஷ் - வர்த்தகம் மற்றும் தொழிற்துறை

ரேணுகா சிங் சாருதா - பழங்குடியின விவகாரங்கள்

ராமேர்வர் டேலி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

கைலாஷ் செளத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

அன்னபூரணா தேவி - கல்வித்துறை

நாராயண சாமி - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

கெளஷல் கிஷோர் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்

அஜய் பட் - பாதுகாப்பு, சுற்றுலாத் துறை

பி.எல். வர்மா - வடகிழக்கு பிராந்திய மேம்பாடு; கூட்டுறவுத்துறை

அஜய் குமார் - உள்துறை விவகாரங்கள்

சவுகான் தேவுசிங் - தொலைத்தொடர்புத்துறை

பக்வந்த் குபா - புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரத்துறை

கபில் மோரேஸ்வர் பாட்டீல் - பஞ்சாயத்து ராஜ்

பிரதிமா பூமிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

சுபாஸ் சர்க்கார் - கல்வித்துறை

பக்வத் கிஷான்ராவ் காரத் - நிதித்துறை

ராஜ்குமார் ரஞ்சன் சிங் - வெளியுறவு விவகாரங்கள்

பாரதி பிரவீன் பவார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

பிஷ்வேஸ்வர் துடு - பழங்குடியின விவகாரங்கள்; ஜல சக்தி

சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை

முஞ்சபாரா மகேந்திர பாய் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை; ஆயுஷ்

ஜான் பர்லா - சிறுபான்மையினர் விவகாரங்கள்

எல்.முருகன் - மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, தகவல் ஒலிபரப்புத்துறை

நிஷித் பிரமானிக் - உள்துறை விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 8 ஜூலை 2021