மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

ஜெர்மனி கொலோன் பல்கலை தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதி!

ஜெர்மனி கொலோன் பல்கலை தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதி!

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து, தடையின்றி இயங்க 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 7) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பிரிவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.

2014ஆம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்றபின், தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

அந்த சமயத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்தனர். அதனால், தமிழ்ப்பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது.

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்குத் தேவையான நிதியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் அளிப்பதாக 2019ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதை உடனடியாக அளிக்க வேண்டுமென அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் வலியுறுத்தினார்.

ஆனால், அத்தொகை கொலோன் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. அதனால், கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து, தடையின்றி, இயங்க தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

கலைஞர் கருணாநிதியின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, இதுபோன்ற திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும் நல்வாய்ப்புக்கு உதவிடும். மேலும், தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலக அளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 8 ஜூலை 2021