மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

விதிமீறல் கட்டடங்களைக் கண்காணிக்க தனிக்குழு: அமைச்சர் முத்துசாமி

விதிமீறல் கட்டடங்களைக் கண்காணிக்க தனிக்குழு: அமைச்சர் முத்துசாமி

முறைகேடாகக் கட்டப்படும் கட்டடங்களைக் கண்காணிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “வீட்டு வசதி வாரியத்தில் அனைத்து பணிகளும் கண்ணியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை முறையாக அறிவிக்கப்படும். தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம். வீட்டுவசதி வாரிய பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படுகின்றன.

முறைகேடாக கட்டப்படும் கட்டடங்களைக் கண்காணிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் தனியாக குழு அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் உடனடியாக இடிக்கப்படும்.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே துறையின் செயலாளர் ஆய்வு செய்துள்ளார். இந்த வாரத்தில் நானும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 7 ஜூலை 2021