மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ஒன்றிய அமைச்சரானார் எல்.முருகன்: 43 பேர் பதவி ஏற்பு!

ஒன்றிய அமைச்சரானார் எல்.முருகன்: 43 பேர் பதவி ஏற்பு!

43 புதிய ஒன்றிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இடம்பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து ஒன்றிய அமைச்சரவையில் இதுவரையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த ஒன்றிய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வானின் இடம் காலியாக உள்ளது. அதுபோன்று ஒன்றிய அமைச்சரவையில் தற்போது 28 இடங்கள் காலியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த ஜூலை 3ஆம் தேதி தமிழக எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், டெல்லியிலிருந்து திரும்பவில்லை. அவரோடு சேர்த்து பாஜக முக்கியஸ்தர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து மின்னம்பலத்தில் இன்று (ஜூலை 7) காலை, மோடி அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாட்டுக்கு வாய்ப்புண்டா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து, எல்.முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி 43 புதிய அமைச்சர்கள் பட்டியலில் எல்.முருகன் இடம்பெற்றுள்ளார்.

1. நாராயண் ரானே

2. சர்பானந்தா சோனோவால்

3. டாக்டர் வீரேந்திர குமார்

4. ஜோதிராதித்யா எம் சிந்தியா

5. ராம்சந்திர பிரசாத் சிங்

6. அஸ்வினி வைஷ்ணவ்

7. பசுபதி பராஸ்

8. கிரேன் ரிஜிஜு

9. ராஜ்குமார் சிங்

10.ஹர்தீப் சிங் பூரி

11.மன்சுக் மாண்டவியா

12. பூபேந்தர் யாதவ்

13. புருஷோத்தம் ரூபாலா

14. கிஷன் ரெட்டி

15.அனுராக் சிங் தாக்கூர்

16. பங்கஜ் சவுத்ரி

17. அனுப்ரியா சிங் படேல்

18. சத்ய பால் சிங் பாகேல்

19. ராஜீவ் சந்திரசேகர்

20. ஷோபா கரந்த்லாஜே

21. பானு பிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேக்கி

24. அன்னபூர்ணா தேவி

25.ஏ. நாராயணசாமி

26. கொளசல் கிஷோர்

27.அஜய் பட்

28. பி. எல்.வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவுசிங்

31. பகவந்த் குபா

32. கபில் மோரீஸ்வர் பாட்டீல்

33. பிரதிமா பூமிக்

34.சுபாஸ் சர்க்கார்

35. பாகவத் கிஷான்ராவ் காரத்

36.ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37.பாரதி பிரவீன் பவார்

38. பிஷ்வேஸ்வர் துடு

39. சாந்தனு தாக்கூர்

40. முஞ்சப்பாரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42.எல்.முருகன்

43.நிஷித் பிரமானிக்

ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக, அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரமேஷ் பொக்ரியால், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர், சதானந்த கவுடா, தவார்சந்த் கெலாட், சந்தோஷ் குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், ஒன்றிய அமைச்சர்கள் 12 பேரும் தங்களது ராஜினாமா கடிதங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கடிதங்களை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 7 ஜூலை 2021