மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமனம்!

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமனம்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகத் திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வரும் அரசு நிறுவனமாகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் மேற்கொண்டு வருகின்றது. 1960 - 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையத்தில் கொண்டுவரும் 5 ஆண்டு திட்டத்தை 2017லிருந்து இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு, மொழி பெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் புதிய தலைவராகத் திண்டுக்கல் ஐ. லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் என பன்முகத் தன்மை கொண்ட இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதைத் தமிழக அரசு வழங்கியது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான லியோனி, 2021 தேர்தலுக்குத் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 7 ஜூலை 2021