மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ஆகஸ்ட் 31க்குள் 40% கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்!

ஆகஸ்ட் 31க்குள் 40% கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்!

தனியார் பள்ளிகளில் முதல் தவணையாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவிகிதம், பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் 35 சதவிகிதம் என 75 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகள், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை வலியுறுத்தி வருகின்றன. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.

தனியார் பள்ளி கட்டணம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததையடுத்து, தனியார் பள்ளிகள் இரண்டு தவணைகளாக 75 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இன்று(ஜூலை 7) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 2021-22ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆனால் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வருகின்றன. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும், மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் 2 மாதங்களிலும் வசூலித்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 7 ஜூலை 2021