மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா?: ஓபிஎஸ்

அதிமுக - பாஜக கூட்டணி  தொடருமா?: ஓபிஎஸ்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தது பாஜக அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 7) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன், “பாஜகவைப் பொருத்தவரை நாடு முழுவதும் 303 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 2014 ஆம் ஆண்டை விட தற்போது அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 18 சதவிகித இஸ்லாமியர் வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்திலேயே 67 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறோம்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மீரட் போன்ற இடங்களில் பாஜக எம்.பி.க்கள் உள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் கோவாவிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சிறுபான்மையினர் சமூகத்தினர் எங்களுக்கு வாக்களிக்க வில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

அதிமுக ஆட்சியின் சில முடிவுகள் இந்த தோல்விக்குக் காரணம் என்று கூட எங்களது நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆனால் பொதுவெளியில் கூட்டணி தர்மத்தை மீறி சி.வி.சண்முகம் பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இவருடைய தோல்விக்கு பாஜகவைக் குற்றம்சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா என்பது குறித்து எங்களது தலைமை அறிவிக்கும். கடந்த வாரம் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு எங்களின் மாநில தலைவர் இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்று குறிப்பிட்டார்.

அதுபோன்று சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் பதில் கூற வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேச நலன் கருதியும் தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 7 ஜூலை 2021