மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

கோயில் சொத்துக்களை காப்பதே அரசின் நோக்கம்: சேகர்பாபு

கோயில் சொத்துக்களை காப்பதே அரசின் நோக்கம்: சேகர்பாபு

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்களை பாதுகாப்பதே அரசின் கடமை என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஜூலை 7) ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ” தமிழ்நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடைபெறவுள்ளது.

நெல்லையப்பர் கோயிலில் உள்ள வெள்ளித் தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நெல்லையப்பருக்கு நடைபெற்று வந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்திமதியம்மன் சன்னதியில் உள்ள பிரகார மண்டபத்தில் புனரமைப்பு பணிகளை செய்ய தொல்லியல் துறையின் பரிந்துரை விரைவில் பெறப்பட்டு சீரமைக்கப்படும். அதேபோல், கருமாரி தெப்பகுளத்தையும் முழுமையாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோயிலில் நவக்கிரக சந்திரன் சிலை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும்.

கோயில் யானை காந்திமதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் கிழக்கு வாசல் மட்டுமே எப்போதும் திறந்துள்ளது. கடந்த 2004ல் மூடப்பட்ட கோயிலின் மேற்கு மற்றம் வடக்கு வாசலை பக்தர்களின் தரிசனத்துக்காக 10 நாளில் திறக்க உத்தரவிடப்பட்டுவுள்ளது. கூடுதல் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 7 ஜூலை 2021