மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

சி.வி.சண்முகத்தின் கருத்தை அதிமுக தலைமை ஏற்கிறதா?: பாஜக!

சி.வி.சண்முகத்தின் கருத்தை அதிமுக தலைமை ஏற்கிறதா?: பாஜக!

பாஜகவால் தான் அதிமுக தோற்றது என்ற சி.வி.சண்முகத்தின் கருத்தை அதிமுக தலைமை ஏற்கிறதா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசுகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இதில் விழுப்புரம் நகரத்தில் மட்டும் 18 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இவற்றில் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.

முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியதன் காரணமாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அதனால் மக்கள் வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள்.

ஆனால் கூட்டணி கணிப்பு சரியாக இல்லை. சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் சில காரணங்களால் நாம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது அப்படி அவர்கள் வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சியைத் தான் அமைத்திருக்க முடியும்.

இதில் நம் இடத்திலும் குறையுள்ளது. எனவே திமுகவிற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துவிட்டார்கள் என யாரும் நினைக்க வேண்டாம். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் எம்ஜிஆர் அம்மா ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். முதலில் நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பாஜகவால் தான் அதிமுக தோல்வியுற்றது என்று சி.வி சண்முகம் கூறியதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. .

சி.வி சண்முகத்தின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என்று பதிவிட்டுள்ளார். அதாவது, அதிமுகவால் தான் பாஜக தோற்றது என்று குறிப்பிடும் வகையில் பதிவிட்டுள்ளார்

பாஜக செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் சேகர், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் கருத்தை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஏற்கிறார்களா என்று பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 87,503 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சி.வி.சண்முகம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 7 ஜூலை 2021