மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

வைகோ மீதான வழக்கு ரத்து!

வைகோ மீதான வழக்கு ரத்து!

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மதிமுக பொது செயலாளர் வைகோ மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரி புகார் அளித்ததின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால், கைது செய்யப்பட்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஊடகத்துறையினர் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வைகோவை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதி நிர்மல்குமார், வைகோ உள்பட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 7 ஜூலை 2021