மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் நேற்று கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், சேலம் தொகுதியிலிருந்து 1984 முதல் 1996 வரையிலும், திருச்சி தொகுதியிலிருந்து 1998 முதல் 2000 வரையிலும் எம்.பி.யாக இருந்தார்.

வி.பி நரசிம்மராவ் அமைச்சரவையில் ரங்கராஜன் குமாரமங்கலம், சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராகவும், அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கடந்த 2000ம் ஆண்டு அவர் காலமானார்.

இவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் (67). இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார்.

கிட்டி குமாரமங்கலம் நேற்றிரவு வீட்டிலிருந்தபோது, அவரது வீட்டுக்கு அருகே சலவை செய்யும் தொழிலாளி கதவைத் தட்டியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் கதவைத் திறந்துள்ளார்.

அவரை தாக்கி கீழே தள்ளிய அந்த சலவைத் தொழிலாளி, அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பணிப்பெண் தப்பிக்க முயன்றும், சலவைத் தொழிலாளியுடன் வந்த இரண்டு பேர் அந்த பெண்ணை தாக்கி ஒரு அறைக்குள் அடைத்துள்ளனர்.

அதோடு கிட்டி குமாரமங்கலம், இருந்த அறைக்குள் சென்று அவரின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து அறையிலிருந்து தப்பித்த பணிப்பெண் இரவு 11 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் , இரவு 9 மணியளவில் குற்றவாளிகள் கிட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். பணிப்பெண் கதவைத் திறந்ததும் அவரை தாக்கி அறையில் அடைத்து வைத்துவிட்டு, தலையணையை வைத்து கிட்டியை கொலை செய்துள்ளனர்.குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் சிதறிக் கிடந்தன. அங்கு கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம்.

இந்த சம்பவத்தில் சலவைத் தொழிலாளியான ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பிச் சென்ற இருவரைத் தேடி வருகிறோம் என்று கூறுகின்றனர்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 7 ஜூலை 2021