மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

மாஜி அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்!

மாஜி அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்!

நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் 20ஆம் தேதி பெங்களூருவில் வைத்து மணிகண்டனைத் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு மணிகண்டன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மணிகண்டனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதனால் அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை கடந்த ஜூலை 2ஆம் தேதி விசாரித்த நீதிபதி செந்தில் குமார், மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த சூழலில் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மணிகண்டன் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 2 வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 7 ஜூலை 2021