மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மனைவியுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மூன்றாம் நிலை ஏற்படுமா, ஏற்படாதா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் முதல்வரிடம் ஆலோசித்து உள்ளோம். இனி மருத்துவர்களிடமும் ஆலோசிக்கப்படும். அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு பள்ளிகள் திறப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து துறை ரீதியாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 75 சதவிகிதம் கட்டணம்தான் வாங்க வேண்டும், அதுவும் 40 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் என இரண்டு தவணையாக வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் தொடர்பாக ஓரிரு நாட்களில் தனியார் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று கூறினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின்படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் என்றும் குறிப்பிட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 7 ஜூலை 2021