மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

மக்களைக் காப்பதே அரசின் முதல் பணி: முதல்வர்

மக்களைக் காப்பதே அரசின் முதல் பணி:  முதல்வர்

பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பது மட்டுமல்ல; பேரிடரே ஏற்படாத சூழலை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது.

இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.

அந்த நோக்கத்தைச் செயலாக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இயற்கைப் பேரிடர்கள் இயற்கையாக மட்டும் ஏற்படுவதில்லை. மனிதர்களும் இதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும். பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை. இத்தகைய சூழலைப் புரிந்து நாம் நடந்துகொள்ள வேண்டும்.

பேரிடர் தடுப்புப் பணிகள் என்பது பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பது மட்டுமல்ல, அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை நாம் உருவாக்கிட வேண்டும்.

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்திட ஒரு நிரந்தரத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில், அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற ஏழை எளிய மக்கள், கிராமப் பகுதிகளின் விவசாயப் பெருங்குடி மக்கள்தான். அந்த பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காத்து, அவர்களின் இழப்புகளை ஈடுசெய்து மறுவாழ்வுக்கு வழிகோலுவதே அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

“பேரிடர்களின் அபாயம் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கைச் செய்திகள் அனைவரையும் சென்றுசேரும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

“பேரிடர் காலங்களில், நீர்நிலைகளின் வழிப்பாதைகள் பாதுகாப்பையும், அனைத்து மருத்துவமனைகளிலும் தடையில்லா மாற்று மின்சார வசதியும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பேன்.

ஒரு அரசின் முதலாவது பணி மக்களைக் காப்பதுதான். அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 6 ஜூலை 2021