மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

இரண்டு பருவங்களாகப் பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு!

இரண்டு பருவங்களாகப் பொதுத்தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு!

நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை இரு பருவங்களாகப் பிரித்து தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவித்தன. இந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்படாமல் போவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2021-22 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் எனத் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும். முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும். ஒவ்வொரு பருவத்திலும் சுமார் 50% பாடத்திட்டங்கள் இருக்கும்.

அகமதிப்பீடு, செய்முறைத்தேர்வு, புராஜெக்ட் ஆகியவை நம்பத்தகுந்த முறையில் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பருவத் தேர்வில் கொள்குறி வகையில் கேள்விகள் இருக்கும். 90 நிமிடங்கள் நடக்கும் இத்தேர்வைக் கண்காணிக்க வெளியில் இருந்து கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்.

இரண்டாவது பருவத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வு 2 மணி நேரம் வரை நடக்கும். இரு பருவங்களில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். இத்தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு நேரில் ஆஜராகலாம்” என்று ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 6 ஜூலை 2021