மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

ஸ்டேன் சுவாமி:குடியரசுத் தலைவருக்கு தலைவர்கள் கடிதம்!

ஸ்டேன் சுவாமி:குடியரசுத் தலைவருக்கு தலைவர்கள் கடிதம்!

மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (ஜூலை 6) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்காள முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன், முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கவுடா, மற்றும் ஃபரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தில், “84 வயதான முதியவரான ஃபாதர் ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்டில் உள்ள ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடி வந்த ஒரு சமூக ஆர்வலர். அவரை பீமா கொரேகான் வழக்கில் தொடர்புபடுத்தி யுஏபிஏ தடுப்புச் சட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தார்கள்.

அவர் சிறையில் இருந்தபோது பலமுறை போராடியும் மனுசெய்தும் அவருக்கான மருத்துவ உதவி மறுக்கப்பட்டது. பலமுறை அவர் உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டும் மறுக்கப்பட்டது. பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் கொரோனா பாதிக்கப்பட்டு உடல் நிலை சீர்கெட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனபோதும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் மரணம் அடைந்தார்.

ஸ்டேன் சுவாமி மீது அரசு தொடுத்த தவறான வழக்குகள், சட்டத்துக்குப் புறம்பாக அவர் வைக்கப்பட்ட நீண்ட கால நீதிமன்றக் காவல், சிகிச்சைக்கு மறுக்கப்பட்ட அநீதி ஆகியவற்றுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 6 ஜூலை 2021