மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

ஒளிப்பதிவு திருத்த மசோதா: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ஒளிப்பதிவு திருத்த  மசோதா: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021ஐ ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா ஒன்றிய அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தைக் கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி வகுக்கும் என திரையுலகினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் என தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி உள்ளிட்டவர்கள் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 6) ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், இது தொடர்பான முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அதில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) பிரிவு 5(ஏ)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்குச் சான்று வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், சான்றளிக்காமல் அத்திரைப்படத்தை நிராகரிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

இதுதவிர, இச்சட்டத்தின் பிரிவு 5(பி)-ன் கீழ், திரைப்பட உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன. இந்தநிலையில், ஒரு படைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் சட்டப்பிரிவுகளைச் சேர்ப்பது 21ஆம் நூற்றாண்டில் அதிகப்படியானது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றளித்த பின்னர், ஒரு திரைப்படத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்வது, திரைப்பட உருவாக்கத்தை மிகவும் ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற ஒரு தொழிலாக மாற்றிவிடும். எனவே இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 6 ஜூலை 2021