மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

எடப்பாடி கோட்டைக்குள் ஓட்டை போட்ட செந்தில்பாலாஜி

எடப்பாடி கோட்டைக்குள் ஓட்டை போட்ட செந்தில்பாலாஜி

அமமுக மாசெக்களையும், பழனியப்பன் போன்ற முக்கியப் புள்ளிகளையும் திமுகவில் இணைத்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று (ஜூலை 5) முன்னாள் முதல்வரும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார்.

செந்தில்பாலாஜி செய்து வரும் ஆபரேஷன் பற்றியும், அதை ஒட்டி சேலம் புறநகர் மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகள் பலர் அறிவாலயத்துக்கு சென்று விட்டதையும் நேற்று பகல்தான் அறிந்து அதிர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதன் விளைவாகத்தான் நேற்று பிற்பகல் திடீரென ஒரு சிலரைக் குறிப்பிட்டு ஒரு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். அதில் முதல் ஆளாக சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரான சி.செல்லத்துரை என்பவர் இடம்பெற்றிருந்தார். மேலும் சசிகலாவோடு போனில் பேசிய எடப்பாடி ஏ.எல்.சுரேஷ் உள்ளிட்டோரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். வழக்கம்போல சசிகலா காரணத்தைச் சொல்லி நான்கைந்து பேரை நீக்கியிருக்கிறார் எடப்பாடி என்றுதான் வெளி மாவட்ட அதிமுகவினர் நினைத்திருந்தனர்.

ஆனால் செல்லத்துரை என்ற பெயரைப் பார்த்து சேலம் மாவட்ட அதிமுகவினருக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தனர். ஏனென்றால் இந்த செல்லதுரைதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளராக இருந்து செயல்பட்டவர். எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்தவர். எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷுக்கு மிகவும் நெருக்கமானவர். எடப்பாடிக்கு ஒரு வகையில் உறவினரும் கூட. இந்த காரணத்தாலேயே அவருக்கு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் குழுத் தலைவர் என்ற பதவியையும் கொடுத்து அழகு பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அப்படி முன்னாள் முதல்வருக்கு சேலத்தில் முக்கியமான ஒரு கையாக இருந்த செல்லதுரையைதான் பேசி முடித்து அவரையும் அவர் தலைமையில் சேலம் புறநகர், மாநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல நிர்வாகிகளையும் திமுகவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் செந்தில்பாலாஜி.

செல்லதுரை திமுகவுக்கு போகும் தகவலைக் கேட்டு அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி, அவரை தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலிக்காததால்தான், அவர் அறிவாலயத்துக்குச் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்.

மின்னம்பலத்தில் மே 18 ஆம் தேதியன்று எடப்பாடி கோட்டையில் செந்தில்பாலாஜி எதற்காக? என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சேலம் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டதில் அரசியலும் இருக்கிறது என்றும், சேலம் மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை வளைக்கத்தான் செந்தில்பாலாஜி எடப்பாடியின் கோட்டைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதேபோல இப்போது செந்தில்பாலாஜியின் முதல் ஆபரேஷனாக எடப்பாடியின் முக்கிய கைகளில் ஒருவரான செல்லதுரையோடு 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதுவும் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே திமுகவுக்குப் போயிருப்பது எடப்பாடி கோட்டைக்குள் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

”செல்லதுரைதான் எடப்பாடி தொகுதி முழுக்க சட்டமன்றத் தொகுதி முழுக்க ஆய்வு செய்தவர். எடப்பாடி பழனிசாமிக்காக களப் பணிகளை முழுமையாக ஆற்றியவர். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பணியாற்றியவர். இதையடுத்து எடப்பாடிக்கு அருகே இருக்கும் மேலும் சிலரையும் நெருங்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி” என்கிறார்கள் சேலம் அதிமுக புள்ளிகள் சிலரே.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 6 ஜூலை 2021