மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

லைசென்ஸ் பெற எட்டு: தமிழகத்தில் உண்டா?

லைசென்ஸ் பெற எட்டு: தமிழகத்தில்  உண்டா?

ஓட்டுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எட்டு போட தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதில், அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்டத் தேவையில்லை. இதன்மூலம், ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதை உறுதி செய்ய முடியும்.

இதற்காக பயிற்சி மையங்களில் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று (ஜூலை 5) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “லைசென்ஸ் வாங்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எட்டு போட தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். போக்குவரத்துத்துறையில் இடைத்தரகர்கள் இல்லாமல், ஊழல் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 6 ஜூலை 2021