மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

சசிகலா: அதிமுகவின் அவசர மாசெக்கள் கூட்டம்!

சசிகலா: அதிமுகவின்  அவசர மாசெக்கள் கூட்டம்!

சசிகலா நாளொரு ஆடியோ பொழுதொரு தொண்டர் என பேசி வரும் நிலையில் வரும் ஜூலை 9 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதற்கான அழைப்பு அனைத்து மாசெக்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிமுகவின் தேர்தல் தோல்விக்குப் பிறகு சில முறை தலைமைக் கழகத்தில் கூட்டம் நடந்திருந்தாலும், அதில் சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பற்றிய விவாதங்கள்தான் அதிகமாக இருந்தன.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்ததும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும், ஒவ்வொரு தொண்டரையும் சந்திக்க உள்ளதாகவும் சசிகலா ஆடியோ உரையாடலில் தெரிவித்திருக்கிறார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்களில் விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த சூழலில்தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சசிகலா பற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களே பகிரங்கமாக எதிர்த்து வருகிறார்கள். இதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பகிரங்கமாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடக்க இருக்கிற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா பற்றிய விவாதமே அதிகம் இருக்குமென்று தெரிகிறது. சசிகலாவுக்கு எதிராக மாவட்ட அமைப்புகளை தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி கேட்டிருந்தும் இன்னும் பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதுகுறித்தும் மாசெக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 5 ஜூலை 2021